” ஏமனின் ஹெளதிகள் நிறுத்தும்வரை பதிலடி தாக்குதல் தொடரும்” – அமெரிக்கா

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஏமனின் ஹெளதிகள் தாக்குதலை நிறுத்தும்வரை அவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
ஹௌதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை சில வாரங்கள் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்கா அதன் தாக்குதலைத் தொடர்ந்தால் செங்கடலில் அமெரிக்கக் கப்பல்கள் மீதான தாக்குதலும் தொடரும் என்று ஹௌதி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹௌதி (Abdul Malik al-Houthi) கூறினார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதல் போர்க் குற்றம் என்று சாடுகிறது ஹௌதி குழு. வாஷிங்டன் அதன் தாக்குதலை நிறுத்திக் கொள்ளும்படி மாஸ்கோ வலியுறுத்துகிறது.
நேற்றைய (16 மார்ச்) தாக்குதலுக்குப் பதிலடியாகச் செங்கடலில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலையும், போர்க் கப்பலையும் தாக்கியதாக ஹௌதி ராணுவப் பேச்சாளர் கூறினார். ஆனால், அதற்கான சான்றுகளை அவர் வெளியிடவில்லை.
பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஹௌதிகளின் அந்தக் கூற்றை நிராகரித்தார்.