ஹெளதிகள் எடுப்பது சொந்த முடிவு – ஈரான்.

ஏமனின் ஹௌதிகளுக்கு எதிராக அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பேசிய ஈரானிய படையினர் மூத்த தளபதி ஹோசேயின் சலாமி (Hossein Salami) ஹௌதிகள் அவர்களாகவே சொந்தமாய் முடிவுகளை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
எதிரிகள் அவர்களின் மிரட்டலை நிறைவேற்றினால் தீர்க்கமாகவும், அழிவு ஏற்படும் வகையிலும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட தரப்புகள் ஏமனின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டுக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும்படி ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டேர்ஸ் (Antonio Guterres) வலியுறுத்தினார்.