பட்டலந்தையில் சித்திரவதைக்கு ஆளான பலர் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளனர்.. குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்…

88-89 காலகட்டத்தில் பட்டலந்தை சித்திரவதை கூடத்தில் சித்திரவதைக்கு ஆளான ஏராளமானோர் அதற்கு சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தாம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாகவும், யாரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, எதிர்காலத்தில் இந்த சித்திரவதை கூட சம்பவத்தில் தொடர்புடைய பலர் சட்டத்தின் முன் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.