PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்!
கல்பிட்டியில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்!
கல்பிட்டியை அண்டிய பிரதேசங்களில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 40 பேருக்கான PCR-கொரோனா பரிசோதனைகள் இன்று(24) காலை கல்பிட்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவருக்கு திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதான வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் 32 வயதுடைய, கண்டல்குளி முனை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இவர் சிறு வயதிலிருந்து சுவாச கோளாறு (வீசிங்) நோயுடையவர் என்றும் கல்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இவர் பெலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தமையால் தனிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த சடலம் பொதி செய்யப்பட்டு பூரண பாதுகாப்புடன் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவுகள் (வெளிவராத) உறுதி செய்யப்படாத நிலையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.