ஜனாதிபதி அலுவலக கார் வெடிபொருட்களுடன் சிக்கியது.

ஜனாதிபதி செயலகத்தில் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த விமானப்படை ஜீப் வண்டியில் இருந்து வெடிபொருட்களுடன் விமானப்படை சிப்பாயும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 34 வயது விமானப்படை சிப்பாய் மற்றும் களனி பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.