ரணில் விக்ரமசிங்க , அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் அரசு செலவில் 2023 இல் லண்டன் சென்றதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என்றும் , அவர் 2023 இல் மூன்று முறை லண்டன் சென்றுள்ளதாகவும் , அதை தவிர சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மே 9-ம் திகதி முதல் பயணம்.

பாரீஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, சர்வதேச ஜனநாயகவாதிகளின் ஒன்றியத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள லண்டன் பயணம்.

ஹவானாவில் G77 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கலந்து கொள்ள நியூயார்க் சென்ற பிறகு லண்டன் பயணம்.

மைத்திரி விக்ரமசிங்காவிற்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் பேராசிரியர் பதவி வழங்கிய விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததால் அந்த பயணத்திலும் பங்குபெற்றார்.

அவர் அரசு செலவில் எந்த தனிப்பட்ட பயணமும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய அரசுக்கு ராஜதந்திர பயணங்கள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என ரணில் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.