சிறுவயது திருமணங்கள் அனைத்து சமூகங்களிலும் நடக்கின்றன. இது ஒரு பொதுவான பிரச்சினை.

சிறுவயது திருமணங்கள் அனைத்து சமநாடு முழுவதும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை நீக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை. அப்படியானால் , தேசவழமை சட்டத்தையும் நீக்க வேண்டும் என்று அவர் கூறுகிறாரா?

ஒரு சிறுபான்மை எம்பியாக இருந்து கொண்டு மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக பேசுவது வருத்தமளிக்கிறது.
மற்ற சமூகங்களின் மத விஷயங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் வெட்கப்பட வேண்டும் என குமுறியுள்ளார் முஜிபுர் ரஹ்மான்.

சிறுவயது திருமணங்கள் அனைத்து சமூகங்களிலும் நடக்கின்றன என்றும், இது ஒரு பொதுவான பிரச்சினையாக பேசப்படாமல் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைப்பது அரசியல் நோக்கங்களுக்காகத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பேசிய அவர் ,

“சிறுவயது திருமணங்கள் அனைத்து சமூகங்களிலும் நடக்கின்றன. இது ஒரு பொதுவான பிரச்சினை. இதை ஒரு பொதுவான பிரச்சினையாக பேசாமல் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைப்பது வேறு அரசியல் நோக்கங்களுக்காகத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அர்ஜுனா எம்பி இது பற்றி பேசும்போது நாடு முழுவதும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்றார். தற்போதுள்ள சட்டங்களை நீக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை.

தேசவழமை சட்டத்தையும் நீக்க வேண்டும் என்று அவர் கூறுகிறாரா என, அவரை கேட்கிறோம். ஒரு சிறுபான்மை எம்பியாக இருந்து கொண்டு மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக பேசுவது வருத்தமளிக்கிறது. மற்ற சமூகங்களின் மத விஷயங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் அதை நினைத்து வெட்கப்பட வேண்டும்” என்றார் முஜிபுர் ரஹ்மான்.

Leave A Reply

Your email address will not be published.