அர்ச்சுனா ராமநாதன் MPக்கு தற்காலிக தடை!

அர்ச்சுனா ராமநாதன் M.P, பாராளுமன்றத்தில் பேசும் கருத்துக்களை நேரடி ஒலி, ஒளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்படும் என சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும், தீங்கு விளைவிக்கும் மற்றும் இழிவான கருத்துக்களை அவர் தெரிவிப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் , அர்ச்சுனா M.P, அவ்வப்போது தெரிவிக்கும் இழிவான, ஆபாசமான மற்றும் கீழ்த்தரமான கருத்துக்கள் ஹன்சார்ட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.
அதன்படி, நாளை 20ம் திகதி முதல் மே மாதம் 8ம் திகதி வரை பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் 8 நாட்களில் அர்ச்சுனாவின் கருத்துக்கள் , பதிவாவது நிறுத்தப்படும்.
இருப்பினும், அந்த காலகட்டத்தில் அவரது இக்கால நடத்தைக்கு ஏற்ப, இந்த தடை, தற்காலிக இடைநீக்கமா? இல்லையா? என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் மேலும் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.