தேசபந்து இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கும்.

போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலா தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல்கள் இன்று மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், தேசபந்து தென்னகோன் தற்போது மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று போலீஸ் மா அதிபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு மது பாட்டில்கள் மற்றும் மொபைல் போன்கள் உட்பட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஹோக்கந்தரை வீட்டில் இருந்து 795 வெளிநாட்டு மது பாட்டில்கள் மற்றும் சுமார் 214 ஒயின் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலா கூறினார்.
பாராளுமன்றத்தில் பேசிய அவர், போலீஸ் நடத்திய இந்த சோதனையில் இரண்டு ஆப்பிள் ரக மொபைல் போன்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.
அந்த போன்களில் இருந்து முக்கிய தகவல்களை பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.