உக்ரைனுடன் முழு போர் நிறுத்தத்திற்கு உடன்பட முடியாது என ரஷ்யா தெரிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலின்போது, ரஷ்யா உக்ரைனுடன் முழு போர் நிறுத்தத்திற்கு உடன்பட முடியாது என வலியுறுத்தியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்தும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது முடிந்த உடனேயே, உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்தும்படி புடின் , ரஷ்ய ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்கா தலையிட்டு உருவாக்கிய அமைதித் திட்டத்தை தொடங்க டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்திற்கு , உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.