யால நுழைவாயிலில் பெரும் சண்டை.. சுற்றுலாப் பயணிகள் பீதியில்..

யால தேசிய வனப்பூங்காவிற்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலில் இன்று காலை பதட்டமான சூழ்நிலை நிலவியது.
வனவிலங்கு அதிகாரிகளுக்கும், பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜீப் ஓட்டுநர்களுக்கும் இடையே இந்த நிலை ஏற்பட்டது.
பதிவு செய்யப்படாத ஜீப்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை என ஜீப் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.