‘புரிதலுடன் system change நடந்துள்ளது.. மிகவும் மகிழ்ச்சி..’ வீதி மதுபான கொள்ளை குறித்து மலிங்கா.

ஏஹெலியகொட பகுதியில் மதுபான லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து, சாலையில் சிதறிய மதுபாட்டில்களை மக்கள் எடுத்துச் சென்றதை நேற்று ஊடகங்கள் மூலம் அறிந்தோம்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 225 திருடர்களால் இந்த நாடு முற்றிலும் அழிந்து விட்டது என்று உரத்த குரல் கேட்டதாக எனக்கு நினைவிருக்கிறது. 75 வருட சாபம் பற்றியும் உரத்த குரலில் கத்திய சத்தம் இன்றும் அவ்வப்போது கேட்கிறது. புரிதலுடன் சிஸ்டம் மாற்றம் system change நடந்துள்ளது போல் தெரிகிறது. அதற்காக எடுக்கும் முயற்சி மற்றும் ஒற்றுமை ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?” என பதிவிட்டுள்ளார்.