ஒரே இடத்தில் இருந்து பெருமளவு ஹெராயினுடன் ஒருவர் கைது !

ிக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருகுமுவ பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் குழுவினர் பெற்ற தகவலின் பேரில் நடத்திய சோதனையில் 33 கிலோ 106 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதான கல்ஹேனகொட, உருகுமுவ பகுதியை சேர்ந்தவர்.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான சந்தேக நபரின் நண்பர் , இந்த போதைப்பொருளை சந்தேக நபருக்கு கொடுத்துள்ளார் என்றும், அவரது அறிவுறுத்தலின்படி சந்தேக நபர் இந்த போதைப்பொருள் தொகையை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும் தற்போது நடந்து வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.