சூடான் இராணுவம் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியது.

சூடான் இராணுவம், அந்நாட்டின் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியாக, அந்நாட்டின் தலைநகரான கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைத்த வெற்றி குறித்து சூடான் தகவல் அமைச்சர் காலித் அல்-ஐஸர் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், சூடான் இராணுவம் அரண்மனையை மீண்டும் கைப்பற்றியதாகவும், கொடியேற்றப்படும் என்றும், வெற்றி முடியும் வரை பயணம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், அரண்மனையை கைப்பற்றிய பின்னர், ஜெனரல் மொஹமட் ஹம்தன் டகாலோ தலைமையிலான RSF பதிலடியாக ஒரு கொடிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
சூடானில் நடக்கும் மோதல் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த போரினால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். நீண்டகால சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரை அகற்றுவதற்காக 2021 இல் ஜெனரல் அப்தெல் ஃபட்டா அல்-பர்ஹான் மற்றும் டகாலோ ஆகியோர் ஒரு இராணுவ சதிக்கு தலைமை தாங்கினர், இறுதியில் மாநில அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.