சாலையில் சடலத்தை வீசி சென்ற இருவர்!

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இறந்த ஒருவரை வீசி சென்றுள்ளனர்.
அருகில் இருந்த ஒருவரிடம் அந்த நபர் அதிக மது அருந்தி மயக்கத்தில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த இருவரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.