இந்திய பிரதமர் ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கை வருகிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கை வருவார் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் அதே நேரத்தில் தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.