கொழும்பு மேயர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கித்ஸ்ரீ ராஜபக்ச போட்டி?

கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் நகர சபை உறுப்பினர் கித்ஸ்ரீ ராஜபக்சவின் பெயரை பரிந்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரிந்துரை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மருதானை, சுதுவெல்ல தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நீண்ட காலமாக கொழும்பு மாநகர சபையின் நகர சபை உறுப்பினராக பணியாற்றி வரும் கித்ஸ்ரீ ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தொகுதியின் அமைப்பாளராகவும் உள்ளார்.
மேலும், அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் கருதப்படுகிறார்.