பிணையில் வெளிவந்த யோஷித ராஜபக்ச மீண்டும் சிக்கலில்; இரவு விடுதியில் தகராறு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவும், அவரது மனைவியும் கொழும்பு 02, கார்டன் ரோட்டில் உள்ள இரவு விடுதிக்குச் சென்றிருந்தபோது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
அவர்களுடன் எட்டு பேர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவருக்கு விடுதிக்குள் நுழைய தேவையான கைப்பட்டை இல்லாததால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைப்பட்டை குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. வந்த எட்டு பேரும் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளனர்.
அப்போது யோஷித ராஜபக்சவும், அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து இரவு விடுதியின் உரிமையாளர் பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தாக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யோஷித ராஜபக்ச பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.