நிறைவேறியது ஆடவரின் கடைசி ஆசை “என்னை Snickers சாக்லெட் சவப்பெட்டியில் புதையுங்கள்”

பிரிட்டனைச் சேர்ந்த பால் புரும் (Paul Broome) என்பவர் தம்மை Snickers சாக்லெட் வடிவம் கொண்ட சவப்பெட்டியில் புதைக்குமாறு உற்றார் உறவினர்களிடம் கேட்டிருந்தார்.
அவர் அதனைத் தமது உயிலிலும் எழுதியிருந்ததாக The New York Post குறிப்பிட்டது.
புரும் மறைந்த பிறகு அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் Snickers சாக்லெட்டை மையமாகக் கொண்டு அவரது சவப்பெட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அதில் ‘I’m nuts!’ எனும் வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்ததாக The New York Post தெரிவித்தது.
புருமின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்கள் அவரது வாழ்க்கையை நன்றாகச் சித்திரிக்கும் வகையில் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினர்.