சன் பிக்சர்ஸ், லைக்காவை ஓரங்கட்டி பெரிய நடிகர்களை குறி வைக்கும் டான் பிக்சர்ஸ் .

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களாக சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இருந்து வந்த நிலையில், தற்போது டான் பிக்சர்ஸ் பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் 2 படத்தையும் தயாரிக்கிறது. அதேபோல் லைக்கா நிறுவனம் தொடர் தோல்விகளை சந்தித்து நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த சூழலில் டான் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனின் பராசக்தி, தனுஷின் இட்லி கடை ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. மேலும் சிம்பு மற்றும் தனுஷ் நடிக்கும் இரு படங்களை இந்நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். மேலும் தனுஷ் அஜித்தின் படத்தை இயக்க டான் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கும் சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா நிறுவனத்தை டான் பிக்சர்ஸ் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வருகிறது.
பராசக்தி படப்பிடிப்பு , தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.