ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்பு!

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22 வயது பெண் மற்றும் அவரது இரட்டை குழந்தைகளின் சடலங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு பிரதாப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கரிஹாரா கிராமத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர்.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் காசிம் அன்சாரி தெரிவித்தார்.

இந்த மரணங்கள் தற்செயலானதா, அல்லது தற்கொலையா அல்லது யாராவது கொலை செய்தனரா என்பது விசாரணையில் தெரியவரும் என்று அவர் கூறினார்.

இறந்த பெண்ணின் கணவர் தில்லியில் வேலை செய்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.