ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மற்றும் பிற உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினருக்கு அரசு தகவல்களை அணுக டிரம்ப்பினால் தடை !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மற்றும் பிற உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் அரசு தகவல்களை அணுகுவதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்களுக்கான அணுகல் பொதுவாக முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சில அதிகாரிகளுக்கு அரசு சேவையிலிருந்து வெளியேறிய பிறகு கிடைக்கும் சலுகையாகும். ரகசிய தகவல்களுக்கான அணுகல் தடை செய்யப்பட்டவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், முன்னாள் வெயோமிங் பிரதிநிதி லிஸ் செனி, முன்னாள் இலினாய்ஸ் பிரதிநிதி ஆடம் கிங்ஸிங்கர் மற்றும் மோசடி வழக்கில் டிரம்ப் மீது வழக்குத் தொடர்ந்த நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் மற்றும் பைடனின் முழு குடும்பத்தினரும் அடங்குவர்.
2021 ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்பின் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ரகசிய ஆவணங்களுக்கான அணுகலை தடை செய்திருந்தார்.