முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டங்கள் கொண்டுவரப்படும்.

முன்னாள் ஆட்சியாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட சொத்துக்களை சட்டப்பூர்வமாக நீதிமன்றம் மூலம் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வாய்ப்பு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதற்கான மசோதா எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.