மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்கியதில் ஐவர் மரணம்.

காஸாவில் உள்ள மருத்துவமனையைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மாண்டோரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர்களில் ஒருவரும் அடங்குவார்.
இத்தகவலை ஹமாஸ் அமைப்பும் பாலஸ்தீன சுகாதார அமைச்சும் வெளியிட்டன.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நிகழ்ந்தது.
ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளபதிகளில் ஒருவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.