இலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இலங்கையில் நிறுத்தி வைப்பு…

உலகின் முன்னணி தொழிலதிபரான இலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணைய சேவை இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அரசு நிறுவனங்கள் அல்லது தரவுகள் அல்லது தகவல் தொடர்பு தகவல்களைப் பாதுகாக்கும் உரிமையை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிலர் இந்த செயற்கைக்கோள் இணைய சேவையை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அரசாங்கம் கருதுகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு நாட்டில் இணைய சேவை வழங்குவதற்கான தேவையான உரிமத்தை கடந்த அரசாங்கத்தின் போது வழங்கியதுடன், இது தொடர்பான புதிய சட்டமொன்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.