சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்.

2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பேட்டிங் செய்து மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணைந்து 66 பந்துகளில் 147 ரன்களை அடித்தனர். இந்த அபாரமான ஆட்டத்தால் லக்னோ அணி 209ரன்கள் குவித்தது. எப்படியும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அசுதோஷ் ஷர்மா மற்றும் பிற பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம் ஆடி டெல்லி அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் சேர்ந்து 12 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை விளாசினர். அவர்களது அதிரடியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இருந்தார். இதில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஓவரில் நிக்கோலஸ் பூரன் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் சேர்த்தார். நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அவர்கள் இருவரையும் தவிர்த்து டேவிட் மில்லர் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தார். அவர் 19 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்ற லக்னோ பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான பிறகு அவர் ஆடும் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.

அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்த போது ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. அதன் பின் அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். விக்கெட்களை இழந்தாலும் அந்த அணியின் டூ பிளசிஸ் 18 பந்துகளில் 29 ரன்கள், அக்சர் 11 பந்துகளில் 22 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் 34 ரன்கள், அசுதோஷ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள், விப்ரஜ் 15 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தனர். இதை அடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

Leave A Reply

Your email address will not be published.