ரணில் நாட்டை இருந்த இடத்திலிருந்து மேலே கொண்டு சென்றார்.. அதை மறுக்க முடியாது – ஜனாதிபதி ஆலோசகர் ஹுலங்கமுவ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை தான் ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்தார்.
“நிச்சயமாக அவர் ஒரு குறிப்பிட்ட பணியை செய்தார். அதை ஒருபோதும் மறுக்க முடியாது. இப்போது அதை அங்கிருந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதை பின்னோக்கி திருப்ப முடியாது.
இந்த கடனை நாம் சம்பாதித்து ஒரு நாள் திருப்பிச் செலுத்தும் முறைக்கு வர வேண்டும்” என்றார் அவர்.