பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்கும்!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக அரசு தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவரது நியமனத்திற்கு எதிராக அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தி வாக்களித்தது என்று பிரேமதாச கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பை மீறி பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டதாகவும், அரசியலமைப்பை மீறியதற்கு முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகரும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்பு சபையில் நடந்தவை முற்றிலும் திரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் சட்டம் பகிரங்கமாக மீறப்பட்டது என்றார்.

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டபோது, இன்று கூச்சலிடுபவர்கள் அமைதியாக இருந்ததாகவும், காலதாமதமாக இதுபோன்ற நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

அதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.