சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் நாட்டினர் கைது!

கட்டுநாயக்க ஆடியம்பலம் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 10 பங்களாதேஷ் நாட்டினரை குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் என்று மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் இங்கு தங்கியிருந்தது குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணை பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும்போது, வெளிநாட்டினருக்கான விசா காலம் காலாவதியாகிவிட்டதாகவும், அந்த பங்களாதேஷ் நாட்டினர் இலங்கையிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து எகிப்துக்குள் நுழைந்து, பின்னர் மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டினரை திருப்பி அனுப்பப்படும் வரை வெலிசரை தடுப்பு மையத்தில் வைக்க குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.