மன்னார் மக்கள் தமக்கு சேவையாற்றக் கூடியவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிப்பார்கள் -டக்ளஸ் தேவானந்தா

மன்னார் மக்கள்  தமக்கு சேவையாற்றக்  கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களைத்  தெரிவு செய்து  வாக்களிப்பார்கள்  என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

<மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம்(25) செவ்வாய்  மன்னார் தேர்தல்  அலுவலகத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப் பணத்தை  இன்றைய தினம் செவ்வாய

மன்னார் தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளோம்.

மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு,தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு,சரியானவர்களை  தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இம்முறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட வுள்ளோம்.

எதிர்வரும் காலங்களில்  மன்னார் மாவட்டத்தில்  அனைத்து சபை களையும் கைப்பற்றுவோம்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.