குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணியின் வெற்றிக்காக கடைசி கட்டத்தில் தன்னுடைய சதத்தை ஸ்ரேயாஸ் தியாகம் செய்தது போட்டியில் தற்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஸ் ஆர்யா 47 ரன்களிலும், அஸ்மத்துல்லா 16 ரன்களிலும் ஆட்டம் இழக்க மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் 19-வது ஓவர் முடிவில் 97 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் தமக்கு சிங்கிள்ஸ் வேண்டாம் என்றும் தொடர்ந்து அதிரடியாக ஆடுங்கள் என ஷாசாங்கிடம் கூறினார்.

தொடக்க வீரராக தமிழக வீரர் சாய் சுதர்சன், குஜராத் அணி கேப்டன் கில்லுடன் களம் இறங்கினார். கில் அதிரடியாக விளையாடி மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி என 14 பந்துகளில் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதே போன்ற ஜாஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி ஆறு சிக்ஸர், 5 பவுண்டரிகள் என பஞ்சாப் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார்.

சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். சுதர்சன் பெவிலியன் திரும்பியது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதேபோன்று இம்பாக்ட் வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷஃபான்போர்ட் 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்க்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.