மத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லஞ்சம் வாங்கப் போய் மாட்டிக்கொண்டார்!

லஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த டான் ஹரிந்திர சானக்க அய்லப்பெரும விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சமாக ரூ.200,000 மற்றும் ரூ.150,000 கேட்டுக் கையூட்டு வாங்கியது தொடர்பாக சந்தேக நபர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், வரும் 28ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அன்று சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.