இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் குவைத்தில் இருந்து 20 இலங்கை கைதிகள் நாடு திரும்பினர்!

குவைத் நாட்டின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் குவைத் – இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த கைதிகள் குவைத்தில் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல், வியாபாரம் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்தவர்கள்.
இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட கைதிகள் வெலிக்கடை மெகசின் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். குவைத் – இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை இரண்டு முறை 52 இலங்கை கைதிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.