ITN, ரூபவாகிணி மற்றும் வானொலி ஆகியவற்றை இணைக்க எந்த முடிவும் இல்லை

சுதந்திர தொலைக்காட்சி, ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றை இணைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
இந்த நிறுவனங்கள் தனித்தனியாக நவீனமயமாக்கப்பட்டு லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.