தென் கொரியாவை வதைக்கும் காட்டுத்தீ

தென் கொரியாவில் தொடர்ந்து 5 நாளாகப் பெரும் காட்டுத்தீ வாட்டியெடுக்கிறது.

சுமார் 2,700 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.18 பேர் இறந்துள்ளனர்.

200க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

அவற்றில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலும் ஒன்று.

தென்கொரியாவில் பரவும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்ற ஹெலிகாப்டர் ஒன்று Uiseong வட்டாரத்தில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

அதிலிருந்த விமானி சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக அந்நாட்டின் தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்தது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய விசாரனை மேற்கொள்ளப்படுகிறது.

காட்டுத்தீயினால் 27,000க்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

சிறைச்சாலையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் இடம் மாற்றப்பட்டனர்.

இதுவரை குறைந்தது 19 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.