IPL நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.

2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் குயின்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் 28 பந்துகளில் 33 ரன்களும், ரியான் பராக் 15 பந்துகளில் 25 ரன்களும் எடுத்திருந்தனர். ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

கொல்கத்தா அணியின் மொயின் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அவர்களே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினர்.

அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேஸிங் செய்தபோது, மொயின் அலி ஐந்து ரன்களிலும், கேப்டன் அஜிங்க்யா ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தார். அவர் 6 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடித்திருந்தார்.

அன்க்ரிஷ் ரகுவன்ஷி 17 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.