மன்னாரில் 1115 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கொண்டு சென்ற இருவர் கைது-1115 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.

மன்னாரிலிருந்து சட்டவிரோதமாகக் குருநாகல் பகுதிக்கு கொண்டு சென்ற ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நேற்றைய தினம் (26) இரவு மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த கைது இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளை ஏற்றிக்கொண்டு  மன்னாரில் இருந்து குருநாகலுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த வேளையில்

முருங்கன் பகுதியில் வைத்து  குறித்த வாகனத்தைச்  சோதனையிட்டபோது

36  மூடைகளில் பொதி செய்யப்பட்ட ஆயிரத்து 115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் போது வாகனத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டதோடு பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட  31 மற்றும் 29 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களும்
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்துடன்   மேலதிக விசாரணைக்காக முருங்கன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் நிலையில்

மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.