திருகோணமலை நகரிலுள்ள மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி பூட்டு.

திருகோணமலை நகரிலுள்ள மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் ஒன்றுகூடும் இடமாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த சந்தைத் தொகுதி மூடப்பட்டது.
இந்நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புடன் சந்தையில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் திருகோணமலை நகரசபை தீயணைப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், நகரின் முதன்மைத் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.