யாழ்ப்பாணத்திலிருந்து கனடா சென்று கொலை செய்த இரு இளைஞர்கள் கைது!

கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கனடாவின் மார்க்கமில் வசிக்கும் கோகிலன் பாலமுரளி (24) மற்றும் டொரொன்டோவில் வசிக்கும் பிரணன் பாலசேகர் (24) ஆகியோர் கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் கொலை சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில், இருவரும் மார்ச் 8 ஆம் திகதி கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, டொரொன்டோ பொலிஸார் இந்த இருவரையும் பிக்கரிங்கில் ஏன் விசாரிக்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு விளக்கவில்லை.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, கொலை செய்ய சதி செய்த மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் சொத்துக்களை திருடிய இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தில் வசித்து வேலைக்காக கனடா சென்று அங்கு வசித்து வந்தவர்கள்.
அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு கொலைகளில் ஒன்று உணவகத்தில் வேலை செய்யும் போது ஏற்பட்ட சம்பள பிரச்சனை காரணமாக நடந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குற்றத்திற்குப் பிறகு, பொலிஸார் அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் தோராயமான உருவத்தை வரைந்து, மாகாணத்தின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்திய பின்னர் கிடைத்த தகவல்களின்படி, இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கோகிலன் பாலமுரளி மற்றும் பிரணன் பாலசேகரை போலீசார் ஏப்ரல் 11 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.