தேசபந்துவுக்கு சிறையிலும் நிம்மதி இல்லை.. துளைத்தெடுக்கும் CIDயினரது நீண்ட விசாரணை.

தும்பறை சிறைச்சாலைக்கு வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள குழு முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிமன்றத்தின் சிறப்பு உத்தரவின்படி தென்னக்கோனிடம் நான்கு நாட்கள் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அந்த சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாத்தறை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் அந்த சிறைச்சாலையில் ஒரு சிறப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் கொழும்பு பேராயர் உட்பட ஒன்பது பேர் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணி நடவடிக்கைகளை இடைநிறுத்தி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.