நாமலின் க்ரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி விலகுகிறார்.. நீதவான் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்கிறது..

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதிவாதியாக உள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளான மஞ்சுல திலக்கரத்ன மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் விலகியுள்ளனர்.
இன்று அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட அறிவிப்பு கிடைக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் , கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.