கொரோனா நெருக்கடியிலும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

தாய்த்தமிழ் பேரவை மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. குறிப்பாக கொரோனா நெருக்கடியிலும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றது.
அந்த வகையில் இன்று 25.10.2020 தாய்த்தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசித்து வரும் கந்தப்பிள்ளை திலீபன் அனுசரணையில் மாங்குளம் தம்பனை கிராமத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம், மற்றும் வயோதிபர்களுக்கான உலர்உணவுப்பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தாய்த்தமிழ் பேரவையின் இணைப்பாளர் ச.ரூபன் கலந்துகொண்டு இவ் உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.