விரைவுச் சாலையில் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்தது…

2025.03.28 நேற்று மதியம், தெற்கு விரைவுச் சாலையில் தொடம் கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 32-7R தூணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தின் போது பேருந்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் இருந்ததாகவும், தீ விபத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
தெற்கு விரைவுச் சாலையின் தீயணைப்புப் பிரிவு தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.