சாமர சம்பத் மட்டும் இல்லை, இன்னும் நிறைய பேர் செக் லிஸ்ட்ல உள்ளனர் – பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கl

சாமர சம்பத் மட்டும் இல்லை, இன்னும் நிறைய பேர் செக் லிஸ்ட்ல உள்ளனர் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க சொன்னார்.
நேற்று (28) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த அரசாங்கங்களைப் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்கி, அதிகபட்ச செயல்திறனுடன் செயல்பட தேவையான சூழலை உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.
அதன்படி, எதிர்காலத்தில் மாதத்திற்கு இரண்டு மூன்று பேரின் பெயர்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக அழைக்கப்படும் என்று அபேசிங்க மேலும் கூறினார்.
“சாமர சம்பத் மட்டும் இல்லை, இன்னும் நிறைய பேர் இந்த செக் லிஸ்ட்ல உள்ளனர் . ஏன்னா CIABOC என்றால் பணம் மற்றும் சொத்துக்கள் கையகப்படுத்துதல், நடக்கும் மோசடிகள் பற்றிய கமிஷன். போன வருஷம் போன அரசாங்கத்தில் வெப்சைட்டில் போய் பாருங்க, 135 குற்றச்சாட்டுகள் இருக்கு. இவங்க ஒரு குற்றச்சாட்டை கூட முன்னுக்கு கொண்டு போகவில்லை. அதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அரசியலில் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்போது ஒவ்வொன்றா இது நடக்குது. அரசாங்கம் என்ற முறையில நாங்க எந்த தலையீடும் பண்ணுவது இல்லை. அந்த நிறுவனங்களை சுதந்திரமாக்கி, வலுப்படுத்தி, அவங்களுக்கு தேவையான ஊழியர்களை கொடுத்து அவங்களோட அதிகபட்ச செயல்திறனோட வேலை செய்ய சொல்லியிருக்கிறோம். அதனால் அந்த அதிகபட்ச செயல்திறனோட கொஞ்ச காலம் போகும்போது மாசத்துக்கு இரண்டு மூன்று பேர் இதுபோல மேற்பார்வை நடவடிக்கைகளுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் போறதை காணலாம்.”
நடக்கும் கைதுகள் அரசியல் பழிவாங்கல்கள் என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கருத்து தொடர்பாகவும் பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
“இந்த நாட்டை ஊழல் பண்ணி, இந்த நாட்டை மோசடி பண்ணி, பணத்தை தவறா பயன்படுத்தினவங்களுக்கு எதிரா சட்டம் நடவடிக்கை எடுக்கதான் எங்களுக்கு ஓட்டு போட்டாங்க. 2015 மாதிரி சட்டம் காட்டுத்தனமா செயல்படாது. நல்லா விசாரிச்சு பார்த்து, வழக்கு சரியா ஸ்திரமா இருந்தா மட்டும் அதை நிரூபிக்க முடியும் என்றால் மட்டும் அந்த வழக்குகள் முன்னுக்கு போகும். எமது எந்த அழுத்தமும் இல்லை. போலீஸ் டிபார்ட்மென்ட்க்கும் CIDக்கும் சட்டமா அதிபர் டிபார்ட்மென்ட்க்கும் பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறோம் அரசியல் தலையீடு இல்லாமல் அவங்களோட சுதந்திரத்தை பாதுகாத்து, அவங்களுக்கு வலுவான முதுகெலும்பை நேரா வைத்துக் கொண்டு ஒரு அரசு ஊழியரா வேலை செய்ய அவர்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறோம். இலங்கையில முதல் தடவையாக அரசு ஊழியர்கள் அந்த சக்தியை எடுத்து இந்த நாட்டில் நடந்த குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். மக்கள் கண்டிப்பா நினைக்க மாட்டார்கள் இது அரசியல் பழிவாங்கல் ” என்று என அபேசிங்க மேலும் கூறினார்.