வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார்!

அனுராதபுர போதனா வைத்தியசாலையில் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராதபுர நீதவான் அலுவலகத்தில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்தியரால் சந்தேக நபரை அடையாளம் காண முடிந்தது.
வைத்தியரை அச்சுறுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் 24 மணி நேரத்திற்குள் கல்நேவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.