மியான்மர் நிலநடுக்கத்தில் ஆயிரக் கணக்கானோர் பலி

மியான்மரை இன்று தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் மாண்டலே பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.
முதல் அதிர்வுக்குப் பிறகு ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் பின் அதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால் மியான்மர் மற்றும் பாங்காக் நகரில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
பாங்காக்கில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தால் சுமார் பத்தாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.