சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. அதன்படி பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக ராஜட் படிட்தார் 32 பந்துகளில் 51 ரன்களையும், பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்களையும், விராட்கோலி 30 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்தனர்.
இவ்வாறு அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. இதன் மூலம் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. இருப்பினும் சென்னை அணி அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 31 பந்துகளில் 41 ரன்களையும், தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 30 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 19 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்தனர்.
இறுதியாக 20 அவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. அதோடு 17 வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. அணியை ஆர்.சி.பி. அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.