மன்னாரில் வெடித்தது கைக்குண்டு; இரு சிறுவர்களின் கைகள் சிதறின!

மன்னாரில் வெடித்தது கைக்குண்டு;
இரு சிறுவர்களின் கைகள் சிதறின!
மன்னார் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தால் கைகள் சிதறுண்ட நிலையில் இரு சிறுவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 12 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
போரின்போது பயன்படுத்தாமல் கைவிட்டுச் சென்ற கைக்குண்டு ஒன்றே வெடித்துள்ளது எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.