பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை மறைத்து வைத்திருந்த இருவர் கைது! ஒருவர் போலீஸ் அதிகாரி.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆவர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மறைத்து வைத்திருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் விசாரணையின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.