கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கொழும்பு ரிமாண்ட் சிறையில் நெரிசல்!

கொழும்பு ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த சிறையில் 650 கைதிகளை மட்டுமே வைக்க முடியும் என்றாலும், தற்போது சுமார் 2,100 பேர் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோரும் கொழும்பு ரிமாண்ட் சிறையில்தான் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சிறைகளிலும் தற்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.